பொலிஸாருக்கு எதிராகவும் ஐ.நாவில் முறைப்பாடு


பொலிஸாா் மனித உாிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸார் கைதிகளை மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்திவருவதாக தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா அமைப்பின் அதிகாரிகளில் ஒருவரான பென் எமர்சன் என்பவரினால் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சித்திரவதைகள், கொடுமைகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது முறைப்பாட்டு அறிக்கை இதுவென தெரிவிக்கப்படுகிறது.

சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புடைய 3600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதிகளை சித்திரவதை செய்தமை தொடர்பில், கைதிகளிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

No comments