சனசமூக நிலையத்துக்குள் பாய்ந்த பட்டா வாகனம் - மீசாலையில் சம்பவம்

யாழ்.மிருசுவில் வடக்கு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பட்டா வாகனம் சனச மூக நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சனசமூக நிலைய கட்டடத்தில் தினமும் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாலை நேர வகுப்புகளில் கலந்து கொள்வர்.

அன்றைய தினம் வகுப்புக்கள் இல்லாததால் மாணவர்கள் வருகை தரவில்லை. இதனால் பெரும் உயிராபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

No comments