கடைக்குள் புகுந்தது ஹயஸ் வாகனம்

யாழ்.நீா்வேலி கந்தசுவாமி ஆலயத்தினை அண்மித்த பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்று  வேக கட்டுப்பாட்டை இழந்து கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளா கியிருக்கின்றது.

இன்று மாலை 5.10 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேகமாக செ ன்ற ஹயஸ் வாகனத்தின் சக்கரம் வெடித்தமையினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் வீதியைவிட்டு விலகி கடை ஒன்றுக்குள் நுழைந்திருக்கின்றது. இந்நிலையில் வாகனத்தில் பயணித்தவா்கள் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனா்.

No comments