மொட்டு கட்சியைச் சேர்ந்தவர்தான் வேட்பாளர் மகிந்த விடாப்பிடி

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

தமது தரப்பில் போட்டியில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர்,  நிச்சயமாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் தான் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments