மகிந்த, மைத்திரி, சந்திரிக்கா மீது ஊழல் குற்றச்சாட்டு

இந்நாட்டின் மூன்று ஜனாதிபதிகள் மக்கள் சொத்துக்களை சூறையாடியுள்ளனர் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க, அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஆதாரங்களை வெளியிட தயாரெனவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசியல் மேடைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறும்போது, அவரின் பின்னால் பின்னர் மஹிந்தானந்த அழுத்கமகே, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள்அமர்ந்திருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு எதிராக மோசடி வழக்குகள் உள்ளன என்றும்​ தெரிவித்தார்.

எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் ஒழிப்பு பற்றி பேசும் தகுதி இல்லை என சாடிய அவர், மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே ஊழல் இல்லாத கட்சி என்றார்.

மேலும்  ஜனாதிபதி, பிரதமர் என்ற பதவிகள் ஊழல் மோசடிகளுக்கான  அனுமதி பத்திரம் என தெரிவித்த அவர், அமைச்சு பதவிகள் மக்கள் சொத்துகளை சூறையாடுவதற்கான அனுமதி பத்திரம் எனவும், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன உள்ளிட்ட மூவரும் மக்கள் ​சொத்துகளை சூறையாடியுள்ளனர் எனவும் சாடினார்.

No comments