கலப்பு நீதிமன்றுக்கு ஜே.வி.பியும் எதிர்ப்பாம்


” சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என ஜெனிவாத் தொடரில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை  இலங்கை அரசு நிராகரித்துள்ளமையானது வரவேற்கக்கூடிய விடயமாகும்.” – என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று (26) நடைபெறும் வரவு – செலவுத் திட்டத்தில் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு,

இலங்கைவாழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதற்கு தேவையான யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச மட்டத்தில் தடையாகவுள்ள சட்டத்திட்டங்களையும் அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆனால், ஒவ்வொருமுறையும் குற்றவாளிகளாகவே ஜெனிவாத்தொடரில் அரச பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அங்கு எதாவது கேள்வி எழுப்பட்டால் மட்டுமே பதிலளிக்கின்றனர். இந்நிலைமை மாறவேண்டும். - என்றார்.

No comments