இந்தியா மீது வழக்கு பதிவு செய்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் எல்லைப்பகுதியான  பாலகோட்டில் 19 மரங்கள் மீது  இந்திய விமானப் படை  குண்டுவீசி இயற்கையை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தானில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

புல்வாமா சம்பவத்துக்கு பிறகு  இந்திய பாகிஸ்தான் இடையே பரஸ்பர மோதல்கள் எல்லைப்பகுதியில் நடைபெற்ற வேளையில்,  பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் காஷ்மீர் பகுதியான பாலகோட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியான ஜப்பா உச்சியில் இந்திய விமானப் படை குண்டுவீசியதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானின் ரிசர்வ் காடுகள் எல்லைக்குள் வருகிறது.இப்பகுதியிலேயே மரங்கள் சேதமடைந்த்தாக கூறி பாகிஸ்தான் வனத்துறை நேற்று இந்தியா மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை அந்நாட்டின் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா சூழல் அழிப்பு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஐநாவில் பாகிஸ்தான் முறையிடவுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments