எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் கைது!


நேற்று இராமேஸ்வரத்தில் இருந்து  மீன்பிடிக்க சென்ற பதினோறு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும் இரண்டு விசைபடகுகளையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைமுகாமில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவர்கள் விபரம்

1,IND -TN -10-MM-844
படகு உரிமையாளர் பெயர்  :திரு.ஜோசுவா

1,கேபிராஜ்-45
2,செல்வம்-35
3,முருகன்-38
4,பிரசிடன்-30
5,நாகராஜன்-38
6,சூலியான்ஸ்-40
7,ராஜ் -35

மற்றும்

2,IND -TN -10-MM-292
படகு உரிமையாளர் பெயர்  :திரு.முருகேசன்

1,இருளப்பன்
2,பால் ராஜ்
3,இராமநாதன்
4,பூமிநாதன்

ஆகிய 11 மீனவர்களும் இரண்டு விசைபடகுகளும் சிறைபிடிக்கப்பட்டனர்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் அத்துமீறி தமிழக படகுகளை விரட்டியடிப்பு: பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதம்


இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து நேற்று  மீன் பிடி அனுமதி சீட்டு  பெற்று சுமார் 576 விசைப்படகுகள்  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த  பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் படகு ஒன்றிற்கு ரூ 30ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

No comments