யாழ் மாநகரப் பகுதியில் மாபெரும் சிரமதானப் பணி






தியாகி அறக்கொடை நிறுவுனர் தியாகேந்திரனின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தூயநகரம் தூய கரங்கள் பிரச்சார மற்றும் சிரமதான அணியினரும் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து யாழ் மாநகரப் பகுதியில் மாபெரும் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வசமாகியிருந்த இரண்டு வட்டாரங்களை பொறுப்பெடுத்து தனது அறக்கொடை நிதி மூலம் மாதச் சம்பளம் வழங்கி தினமும் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டுவருகின்றார் தியாகி அறக்கொடை நிறுவுனர் தியாகேந்திரன்.

இதேவேளை அண்மையில் கட்டாக்காலி நாய்களை பராமரிக்கும் காப்பகம் அமைக்க மேற்கொள்ளப்பட்டிருந்த அவரது முயற்சி ஆரம்ப நிகழ்வு நடைபெறவிருந்த தினத்திற்கு இரு தினங்களுக்கு முன் திட்டமிட்டு யாழ் மாநகர முதல்வர் ஆர்னோட் மற்றும் துணை முதல்வர் ஈசனினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இன்நிலையில் இன்று பொது அறிவித்தல் ஒன்றின் மூலம் யாழ் மாநகரின் பெரும் பகுதிகளை சிரமதானம் செய்ய அழைப்பு தியாகி அறக்கொடை நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.

அவ் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தூய நகரம் தூய கரங்கள் பிரச்சார மற்றும் சிரமதான அணி மற்றும் மருத்துவர்கள், கல்வியாளர்கள் பொதுக்கள் என பலர் ஆர்வத்துடன் சிரமதானப் பணிகளில் பங்கேற்றுவருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து தியாகி அறக்கொடை நிறுவுனர் தியாகேந்திரனும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

No comments