புதைகுழி 30வருடத்திற்குட்பட்டதே:ஆய்வாளர் ராஜ் சோமதேவா!


மன்னார் புதைகுழி தொடர்பிலா பீற்றா நிறுவன ஆய்வறிக்கையினை அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த சிங்கள தொல்பொருளியல் ஆய்வாரள் நிராகரித்துள்ளார்.

ஹொங்கொங்கிலிருந்து வெளிவரும் ஆசிய டைம்ஸ் பத்திரிகைக்கு களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் ஆலோசகர் பேராசிரியர், ராஜ் சோமதேவா வழங்கிய செவ்வியிலேயே பீற்றா நிறுவன ஆய்வறிக்கையினை மறுதலித்துள்ளார்.

மன்னார் பாரிய மனித புதைகுழிகளில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை கொண்டு பீட்டா அனலிட்டிக் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட ரேடியோ கார்பன் டேட்டிங் முடிவுகளை கடுமையாக நிராகரித்துள்ளார்.

முனித சடலத்திலிருந்து நாம் கண்டுபிடித்துள்ள பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவற்றிற்கு இடையே ஒரு பொருந்தாத தன்மை உள்ளது, அமெரிக்க ஆய்வகம் நமக்கு அளித்த முடிவு சந்தேகத்தை தருகின்றது. ஆகையால்,இந்த கார்பன் அறிக்கையினை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளதென அவர் கூறியுள்ளார்.

அப்பகுதி உப்பு மண்தன்மையுடையது.நீண்ட காலமாக உப்பு நீரில் கிடந்த எலும்புகள் அதனை உறிஞ்சியுள்ளன, இதனால் அவை இரசாயன கலவைகளாக மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் புதைகுழி அகழ்வில் ஈடுபட்ட சட்டவைத்திய மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்சவை ஆசிய டைம்ஸ் மேற்கோளிட்டு கருத்து வெளியிடுகையில் கார்பன் பரிசோதனை கண்டுபிடிப்புகளின் உத்தியோகபூர்வ விளக்கம் பீட்டா அனலிட்டிக்கிடமிருந்து மார்ச் 22 ஆம் திகதிக்கு முன்னர் கோரப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் அனுப்பப்பட்ட மாதிரிகள் முற்றிலும் 'அசுத்தமானவை' என்றும், புலனாய்வாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ள இறுதி முடிவுகளுக்கு தாமதத்திற்கு வழிவகுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இவற்றில் இருந்து மன்னார் புதைகுழி  மனித எலும்புக்கூடுகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எஞ்சியுள்ளதாக இருக்க முடியாது.உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டதாகவே அது இருக்கலாமென்ற சந்தேகம் வலுத்துள்ளது.

No comments