வடமராட்சி கிழக்கு யாருக்கு:சுமா டக்ளஸ் ஆதரவாளர்கள் மோதல்!


வடமராட்சி கிழக்கு பகுதியில் மண்ல் அகழ்ந்து விற்பனை செய்வது தொடர்பில் ஈபிடிபி மற்றும் சுமந்திரன் ஆதரவு தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களிடையே முறுகல் தோன்றியுள்ளது.

வடமராட்சி கிழக்கின் குடத்தனை பொற்பதிப் பகுதியில் அரச நிலத்தை அபகரித்து போலி உறுதி முடித்து திருட்டுத்தனமாக மணல் அகழ்வில் ஈடுபட முனைந்ததாக ஈபிடிபியினரை தமிழரசு ஆதரவாளர்கள் சிறைபிடித்துள்ளனர்.எனினும் பின்னர் டக்ளஸின் தலையீட்டையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

குடத்தனை பொற்பதி பிரதேசத்திற்குள் உள்ள அரச நிலம் ஒன்றிற்கு வெளிப்படுத்தல் உறுதி மூலம் 10 ஏக்கர் நிலத்தினை அபகரிப்பதற்கு ஈபிடிபி முக்கியஸ்தர் ஒருவர் முற்பட்டுள்ளார்.அவர் குறித்த உறுதி பதிவிற்காக சென்ற சமயம் சந்தேகம்கொண்ட பதிவாளர் செயலகம் அதன் விபரத்தினை பிரதேச செயலகத்திற்கு அனுப்பி விபரம் கோரியுள்ளது.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விபரத்திற்கான அனுமதி பிரதேச செயலகத்தினால் மறுக்கப்பட்ட நிலையிலும் தொல்லியல்திணைக்களம் , கணியவளத் திணைக்களம் , சுற்றுச்சூழல் அதிகார சபையினரின் உதவியுடன் அப் பகுதியில் மணல் அகழ்விற்கான நடைமுறைகள் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு இடம்பெற்ற முயற்சியினை திரண்ட தமிழரசு ஆதரவாளர்கள் தடுத்தமையினால் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம் விடுமுறை தினத்தில் திணைக்கள அதிகாரிகள் சகிதம் குறித்த வெளிப்படுத்தல் நடந்துள்ளது.

இதனால் ஆத்திரமுற்ற தமிழரசு ஆதரவாளர்கள் அளவீட்டுக் கருவிகளை பிடுங்கி எறிந்ததுடன்  அங்கே நிற்றவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற சமயம் அங்கே நின்ற அரசியல் கட்சியினரும் அவர்களின் விசுவாசிகளும் தப்பியோடினர்.இருப்பினும் இருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அப்போது கைத் தொலைபேசி மூலம் டக்ளஸ் அங்கு நின்றவர்களுடன் உரையாடி அந்த இருவரையும் விடுவித்துள்ளார். 

வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வ மூலம் பில்லியன்களில் ஈபிடிபி கடந்த காலங்களில் வருவாய் ஈட்டியிருந்தமை தெரிந்ததே.

No comments