கிணறு வெட்டிய கிடங்கில் மனித எலும்புக்கூடுகள் - மட்டக்களப்பில் சம்பவம்மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

சத்துருக்கொண்டான் கடற்கரை வீதியோரத்தில் தனியார் காணியொன்றில் தற்காலிக கிணறு ஒன்றிறை அமைப்பற்காக கிடங்கு வெட்டும் போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து கிராம சேவகர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments