சுரேன் இராகவனின் கோலாகல பௌத்த மாநாடு?


வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவனின் கனவான பௌத்த மாநாடு வவுனியாவில் நடந்தேறியுள்ளது.

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா சிறீ போதி தட்சிணாராம விகாரையில் நடத்துள்ளது.

வடகிழக்கு இரு மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட கௌரவ தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வெவ விமலசார தேரர் அவர்கள் , புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இந்த பௌத்த மாநாடு நடைபெற்றிருந்தது.

வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் வடமாகாண பௌத்த மாநாடு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வழிநடத்தலில் வவுனியா சிறீபோதி தட்சிணாராம விகாரையில் சமய வழிபாடுகளின் பின்னர் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுடனான மத அனுஸ்டானங்களோடு தொடங்கியது.பௌத்த தேரர்கள் மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டு சமயவழிபாடுகளின் பின்பு சர்வ மத தலைவர்களின் ஆசிவழங்கப்பட்டு இவ் வடமாகாண பௌத்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

யுத்தத்தால் உயிர் நீத்த மக்களுக்கான ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் இதன்போது நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் முற்றுமுழுதாக இராணுவ பிரசன்னம் அதிகமாக இருந்த நிலையில் யுத்தத்தால் உயிர் நீத்த எவருக்கென கேள்வி எழுந்துள்ளது.


No comments