தூத்துக்குடியில் கவுதமன்! பலிக்குமா எண்ணம்!

தமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த  திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும், அதற்கான முழு அறிவிப்பையும் அறிக்கையினையும் இன்னும் 2 நாட்களில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  ஐ.நா. சபையில் பேசியவர் கவுதமன்,  ‘ஸ்டெர்லைட் ஆலையினை மூட வேண்டும் என வலியுறுத்தி 100 நாட்களுக்கும் மேல் 13 உயிர்களை சுட்டுக்கொன்ற ரத்தம் காய்வதற்குள் இந்த மக்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளனர் என்றும் 
அந்த மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது பற்றி, ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடிய குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார்.


No comments