இலங்கை முழுவதும் மின்தடை - சில தினங்களுக்கு நீடிக்கும்


நுரைச்சோலை மின் நிலைய 2 வது  மின்பிறப்பாக்கி  பழுதடைந்துள்ளமையால் பழுது சீர் செய்யப்படும் வரை நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்.குடாநாட்டில் பகல் வேளைகளில் சுமார் நான்கு தொடக்கம் ஐந்து மணித்தியாலங்களும் இரவில் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபையின் யாழ் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments