கரடியே காறித்துப்பிய கதை?


தென்னிலங்கை தலைவர்களோடு  சுயலாப தரகுத்தமிழ் தலைமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே! குடியிருக்க ஒரு துண்டு நிலமோ குச்சு வீடோ இன்றி வாக்களித்த தமிழ் மக்கள் அங்கே தவித்திருக்க, தமக்கு மட்டும் ஆடம்பர மாளிகைகையும், சொகுசு வாகனங்களும் கேட்டு பெறுவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறிவிட முடியுமா? என டக்ளஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் தீர்விற்கு ஒத்துவரவில்லை என்று எதிர்க்கட்சி மீது பழி சுமத்திவரும் இவர்கள், தமக்கு கிடைத்திருக்கும் சலுகைகளுக்கு அதே எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கியதும், அதற்கு மட்டும் யாரும் அறியாமல் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்து வருவதை தேசிய நல்லிணக்கம் என்று கூறி விட முடியுமா?

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும், அன்றாடத்தேவைகளையும், பெற்றுக்கொடுக்க மறந்தவர்கள், அதற்காக கடந்த காலங்களைப்போல் அண்மையிலும் கனிந்து வந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த மறுத்தவர்கள், இலங்கையில் பெய்கின்ற மழைக்கு ஜெனீவாவில் குடை பிடிக்க போகின்றார்கள் எனவும் டக்ளஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈபிடிபி அரச ஒட்டுக்குழுவென கூட்டமைப்பு விமர்சனம் செய்த காலங்கடந்து தற்போது கூட்டமைப்பு அரசின் முகவர்களென ஈபிடிபி விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments