சிறிலங்காவின் சுகாதாரத் துறைக்கு சீனா 20 பில்லியன் நிதியுதவி

சிறிலங்காவின் சுகாதாரத் துறையை முன்னேற்றுவதற்கு, 20 பில்லியன் ரூபா கொடையை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்விடம், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகம் ஊடாக இந்த நிதி வழங்கப்படும் என்றும் ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 2020இற்கு முன்னதாக அறுவைச் சிகிச்சைக் கூடம் ஒன்றை வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது என்றும், சிறிலங்காவின் சுகாதார துறையை வலுப்படுத்த ஜப்பான் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும், அவர் உறுதி அளித்துள்ளார்.

No comments