பிணை முறி மோசடி - முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட நால்வர் கைது
மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பணிப்பாளர்கள் மூவர் CID இனால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஒப்பந்த பத்திர ஊழல் தொடர்பில் இவர்கள் கைது செய்ய்பட்டுள்ளனர்.
இன்று காலை இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிங்கப்பூரிற்குத் தப்பிச் சென்ற மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடுகடத்துவது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்தியவங்கி பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாரிதொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment