இன அழிப்பு இராணுவ நிகழ்வை புறக்கணிக்க அழைப்பு!


ஜநாவில் நீதி கோரி முன்னெடுக்கப்படவிருக்கும் யாழ்.பல்லைக்கழக சமூகத்தின் நாளை போராட்த்திற்கு பல தரப்புக்களும் தமது ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன.

இந்நிலையில்  இலங்கை இராணுவத்தின் 57வது படைப்பிரிவினால் நாளையிரவு சனிக்கிழமை கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்திலே ஒழுங்குசெய்யப்பட்டுள்ள கேளிக்கை களியாட்ட ஆடல் பாடல் நிகழ்வுகளை புறக்கணிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பொது அமைப்புக்கள் விடுத்துள்ள அழைப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளது போராட்டம் தொடர்கின்றது.அரசியல் கைதிகளது உறவுகள்,நில ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுடையதென தமிழர் தாயகம் போராட்ட களமாகவேயுள்ளது. அத்தகைய ஆக்கிரமிப்பின் அடையாளமாக உள்ள இலங்கை இராணுவத்தினால் எமது பிரதேசங்களில் நடாத்தப்படும் சகல நிகழ்வுகளையும் புறக்கணிப்போம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இக்காலப்பகுதியில் பெருமெடுப்பில் ஒரு நிகழ்வை நடாத்துவது உள்நோக்கம் கொண்டது.அந்த நிகழ்வில் தமிழ்மக்கள் அதிகம் பேரை பங்குபற்றச்செய்வதனூடாக பாதிக்கப்பட்ட மக்களே தங்களுடன் நட்புறவு பேணுகின்றார்கள் என்று சர்வதேசத்திற்கு நாடகமாடவே இராணுவத்தால் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

எனவே காரணத்தை சரியாகப்புரிந்து இந்நிகழ்வைப்புறக்கணிப்போம் காலை யாழ்பல்கலையில் நடைபெறவுள்ள நீதிக்கான போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரண்டு எமது உரிமைக்குரலை ஒருசேர உரத்துச்சொல்வோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments