ஏறாவூரில் கோர விபத்து மூவர் உடல் கருகிப் பலி




மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் இன்றிரவு ஏற்பட்ட கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களும் தீப்பற்றிக்கொண்டன. அதில் சிக்குண்டே மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்.

அதேவேளை, இந்த அனர்த்தத்தில் சிக்கி மேலும் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments