கோர விபத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் பலி 3 பிள்ளைகள் படுகாயம்

கொழும்பு, குருணாகலை பிரதான வீதியில் பொல்கஹாவெலயில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மேலும் மூன்று சிறார்கள் படுகாயமடைந்துள்ளனர்.


கொழும்பிலிருந்து குருணாகலை நோக்கி பயணித்த இலங்கை கடற்படைக்கு உரித்தான வேனும், எதிர் திசையில்வந்த ஆட்டோவொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

மூன்று சிறார்கள் உட்பட ஆட்டோவில் ஆறுபேர் பயணித்துள்ளனர்.

இவர்களில் மூவரே ( தாய், தந்தை, உறவினர் ஒருவர்) விபத்தில் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த குழந்தைகள் குருணாகலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றன.

அலவ்வ பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக குடும்பம் சகிதம் சென்ற வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. பொல்கஹாவெல பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

No comments