அபினந்நதனை வரவேற்க திரண்டுள்ள மக்கள்!

இந்திய விமானி அபினந்தன் மார்ச் 1ம் தேதி விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்தது. இதையடுத்து அபினந்தனை விடுவிக்கும் நடைமுறைகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டது. 

அதன்படி, அபினந்தன் ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து இன்று மதியம் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். அவரை வரவேற்பதற்காக ராணுவ அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.  அபினந்தனின் பெற்றோரும் அவரை வரவேற்க நேற்று இரவே டெல்லி புறப்பட்டு வந்தனர்.
இதேபோல் வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே வாகா எல்லையில் குவியத் தொடங்கினர். 


No comments