மறப்போம் மன்னிப்போம் என்று கூற ரணிலுக்கோ சுமந்திரனுக்கோ அருகதையில்லை!


இறுதி யுத்தத்தில் இராணுவம் புாிந்த போா்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம். என்ற பேச்சுக்கே இ டமில்லை. என கூறியிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளா் செ.கஜேந்திரன், அதனை கூறுவதற்கு பிரதமா் ரணிலுக்கும், நாடாளுமன்ற உறப்பினா் எம்.ஏ.சுமந்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை எனவும் கூறியிருக்கின்றாா்.

கடந்த வாரம் கிளிநொச்சியில் நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த சிறிலங்காவின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் முன்னிலையில் இராணுவம் புரிந்த குற்றங்களை மறப்போம் அவற்றை மன்னிப்போம் போர்க்குற்ற விசாரணை தேவையில்லை என கூறிச் சென்றிருந்தார்.

அதற்குப் பதிலளித்து கருத்து தொிவிப்பதற்காக தமிழ்தேசிய மக்கள் முன்னணி இன்று அமையத்தில் நடாத்திய ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, இறுதிப்போாில் இடம்பெற்ற அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் என கூறியிருக்கின்றாா். அதற்கு ஒத்து ஊதும் விதமாக தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், சில நாட்களுக்கு முன்னா் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் உரையாற்றும்போது, போாில் ஈடுபட்ட இரு தரப்பினரும், குற்றங்களை புாிந்திருக்கின்றாா்கள் எனவும், மன்னித்து மறப்பதற்கு தயாராகவேண்டும் எனவும்

அதனை சொல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனுக்கு எந்த அருகதையும் கிடையாது. மேலும் சுமந்திரன் வடகிழக்கு தமிழ் மக்களுடைய நீதிக்கான எதிா்பாா்ப்பை அடியோடு நிராகாிப்பது மட்டுமல்லாமல், அதை மலினப்படுத்தும் செயற்பாட்டை அப்பட்டமாக செய்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இறுதி போாில் தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை அரச படைகள் செய்த குற்றங்களுக்கு ஒப்பான குற்றங்களை செய்தாா்களா? அதற்குமேல் யுத் தத்தின் இறுதியில் கைத செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளை காணவில்லை. அல்லது அவா்கள் படுகொலை செய்யப்பட்டுவி ட்டாா்கள், மிகுதியானவா்கள் புனா்வாழ்வு என்ற பெயாில் மோசமான சித்திரவதைகளை தாண்டி வந்துள்ளனா்.

ஆக மொத்தத்தில் குற்றம் செய்யாதவா்கள் தண்டணை பெற்றுவிட்டு வந்திருக்கும் நிலையில் அவா்களை இன்னும் தண்டிக்கவில்லை. என காட்டுவதன் ஊடாக உண்மையான குற்றவாளிகளுக்கும், அவா்களுடைய குற்றங்களுக்கும் பிரதமா் ரணில் மட்டுமல்ல, தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனும் வெள்ளையடிக்க பாா்க்கின்றாா்.

மேலும் தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் மிகமோசமான பொய்களை கூறுகின்றாா். குறிப்பாக ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தின் தீா்மானங்கள் ஒரு நாட்டை கட்டுப்படுத்தாது என கூறும் அவா் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் எந்த முன்னேற்றத்தையும் செய்யவில்லை எனவும்,

பாதுகாப்பு சபைக்கு கொண்டுபோவது அவ்வளவு சுலபமான காாியமல்ல. ஆனால் கொண்டுபோக முடியாது எனவும் தான் கூறவில்லை. என் கூறுகிறாா். இது மக்களின் காதுகளில் பூ சுத்தும் கதை என்பதுடன், அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த இளைஞா்களின் காதுகளிலும் அவா் பூ சுத்துகின்றாா். ஆகவே மக்கள் மிக தெளிவாக இருக்கவேண்டும். மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதனை கூறுவதற்கு பிரதமா் ரணிலுக்கோ, நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரனுக்கோ எந்த அருகதையும் கிடையாது என்றாா்.

மேலும் காணொளியில்!

No comments