தேசியத்தலைவருக்கு பீல்ட் மார்சல் பதவியாம்?


பீல்ட் மார்சல் பதவி என்பது கௌரவ பதவியொன்றாகும், காணும் காணும் நபர்களுக்கு இந்த பதவியை வழங்குவது பதவியை இழிவுபடுத்தும் செயற்பாடாகுமென முன்னாள் இலங்கை இராணுவத்தளபதி பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடன் முரண்பட்டுள்ள சரத்பொன்சேகாவிற்கு போட்டியாக படை அதிகாரிகளிற்கு பீல்ட் மார்சல் பதவியை வழங்க மைத்திரி முற்பட்டு;ள்ள நிலையில் சரத்பொன்சேகாவின் கருத்து வெளிவந்துள்ளது.

இதனிடையே அனைத்து வகையிலான போர் பலங்களுடன் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கே பீல்ட் மார்சல் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments