சுதந்திர தினம் கரிநாள் அல்ல - சுமந்திரன்

சிறிலங்காவின் தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அது தவறான நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறிப்பிட்டதமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நாளைய தின எதிர்ப்பு நடவடிக்கைகளை தாம்  முற்றாக எதிர்ப்பதாவும் எதிர்ப்புக் கூட்டங்களைப் பகிஷ்கரிப்பதாகவும், தேசிய உணர்வுகளை வைத்துக்கொண்டே இலக்குகளை வெற்றிகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் தேசிய சுதந்திரதின நாளை நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் சுதந்திர தினத்தன்று யாழ்பானம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்திருந்தது.

இந் நிலையில் அதற்கு தமது ஆதரவை வழங்குவதாக வடக்கு முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை வழங்கியுள்ளன.

இந்நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவிக்கும் முடிவுக்கு தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

No comments