ஏப்பிரலில் வெளிவருகிறது சாம்சாங்கின் மடிதிரை திறன்பேசி!

அனைவரும் எதிர்பார்த்திருந்து சாம்சங் நிறுவனதின் மடிதிரை திறன்பேசினான கலெக்ஸி போல்ட் (galaxy fold) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வெளிவரவுள்ள புதிய திறன்பேசியில் 7.3 இன்சி மற்றும் 4.6 இன்சி அளவுகளில் இரு தொடு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மடிக்கப்படும் இரு பகுதியிலும் இரு மின்கலங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திறன்பேசி மடிக்கப்பட்ட நிலையில் 4.6 இன்சி அளவிலும், விரிக்கப்பட்ட நிலையில் 7.3 இன்சி அளவிலும் பயன்படுத்தலாம்.


இரு பகுதிகளையும் மடித்துப் பயன்படுத்துவதற்கு பலமான கீஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபே திறன்பேசியின் முதுகெலும்பாகச் செயற்படும் எனக் கூறுயுள்ளனர் சாம்சாங்க நிறுவனத்தினர்.

கீல் தொியாதவாறும், விரிக்கபட்ட தொடுதிரையும் மடிப்பு தொியாதவாறும் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது புதிய சாம்சாங் போல்ட் திறன்பேசி. மிகவும் பார்ப்பதற்கு அழகாக அமைந்துள்ளது.

ஏப்பிரல் 26 நாள் விற்பனைக்க வருகின்ற சாம்சாங் போல்ட் திறன்பேசியின் விலை 1980 அமொிக்க டொலர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கறுப்பு, பச்சை, நீலம், சில்வர் என நான்கு நிறங்களில் வெளிவருகின்றது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:

- 7.3 இன்சி இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED பேனல்
- 4.6 இன்சி சூப்பர் AMOLED பேனல்
- 12 ஜி.பி. ரேம்
- 512 ஜி.பி. மெமரி
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, டூயல் பிக்சல் AF, OIS, f/1.5 - f/2.4
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, PDAF, OIS, f/2.4
- 10 எம்.பி. f/2.2 + 8 எம்.பி. டெப்த் கேமரா, f/1.9 (உள்புறம் இரு கேமரா செட்டப்)
- 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- ஆண்ட்ராய்டு பை
- 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)

#Samsung #Samsung Fold

No comments