கையெழுத்துப் போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன் கையழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட இக்கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. யாழ் பேருந்து நிலையம் முன் பதாதைகள் தாங்கியவாறு கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்ப்பட்டதைத் தொடர்ந்து கையேழுத்துச் சேகரிக்கும் போராடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments