கலையும் கூடாரம்! பாமக மாநில துணை தலைவர் ரஞ்சித் விலகினார் !

பாமகவின் தேர்தல் கூட்டணியால் குழப்பம் ஏற்பட்டடுள்ளது . அடுத்தடுத்து பலர் அக்கட்சியில் இருந்து விலகிவருகிறார்கள் .அந்தவகையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்தார்

கோவையில் நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள்.

மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல. இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது.

நான்கு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது எனறார்.

No comments