கொலையாளிகளும் ஆர்ப்பாட்டத்திலாம்?


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் தமிழரசுக்கட்சி திருட்டு மௌனம் காத்திருந்த போதும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பங்காளி கட்சி பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இறுதி யுத்த காலத்தில் இராணுவத்தினருடன் இணைந்து புலிவேட்டையாடிவரும் மாமனிதர் தராகி சிவராம் படுகொலை சூத்திரதாரிகளுள் ஒருவருமான ஆர்.ஆh என்றழைக்கப்படும் இராகவன் காணாமல் ஆக்கப்பட்டோர் பேரணியில் முன்வரிசையில் நின்றிருந்தார்.

அதே போன்று தமிழரசின் பக்கம் பாய்ந்திருந்த து.ரவிகரன்,சுமந்திரன் எதிர் தரப்பினை சேர்ந்த சாள்ஸ்; உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர்.

No comments