கேப்பாபுலவில் 24மணி நேர கண்காணிப்பு!


கேப்பாபுலவு மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடிப்பதுடன் தமது காணிகளினுள் உள்நுழையும் போராட்டமொன்றையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களது ஜனநாயக போராட்டத்தை முடக்க மக்களது காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள  இராணுவ முகாமை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் குதித்துள்ளனர்.

704 ஆவது நாளாக இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறுகோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த மக்களது நிலமீட்பு போராட்டத்தில்  .கடந்த ஒருவருடங்களுக்கு முன்பு ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்ட்டுள்ள நிலையில் மிகுதி காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளது.அதில் இராணுவத்தினர் தமது படை  முகாங்களை அமைத்து நிலைகொண்டுள்ளனர் . இந்த காணிகளை முழுமையாக விடுவிக்க கோரி மக்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர்.

இந்நிலையில் மக்களது போராட்டத்தை தொடர்ந்து முகாம் வாயில்களில் முள்ளுக்கம்பிகளை கொண்டு பல்வேறு தடுப்புக்களை போட்டு முகாமை பலத்த பாதுகாப்புக்குள் கொண்டுவந்துள்ளனர்.

அத்துடன் தயார் நிலையில் காவல்துறையினர் 24மணி நேரமும் வைக்கப்பட்டுமுள்ளனர்;.

No comments