ஒரே பிரசவத்தில் இரண்டாவது தடவையாக 7 குழந்தைகள்!

ஈராக் நாட்டின்  கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்தவர், யுசுப் பத்லே. இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் இவரது 25 வயது மனைவி மீண்டும் கர்ப்பமானார்.
இந்நிலையை அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவி இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.

No comments