நாம் மக்களிற்காகவே கூட்டு சேர்வோம்!


சுதந்திரதினம் சுதந்திரம் பெற்ற மக்களாலேயே கொண்டாடப்படலாம். அடக்குமுறைகள் மத்தியில் வாழும் எம்மால் சுதந்திரம் கொண்டாடப்படுவது அழுத்தத்தின் பேரால் நடைபெறுவதாக அமையுமென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு சுதந்திரதின போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அங்கு கருத்து வெளியிட்ட அவர் எம்மிடையே பத்து வருடங்களின் பின்னரும் பெருவாரியாக குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரின் பலவந்தத்தாலேயே நடைபெறுவதாக அமையும். இனியும் எமது மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாத ஒரு கட்டம் தற்பொழுதுஉருவாகியுள்ளது.

இது எம்மால் மட்டும் நடத்தப்படும் போராட்டம் அன்று. அடக்கு முறைகள்,மக்கள் உரிமைகளை வழங்குவதில் அசமந்தப் போக்கு,ஆக்கிரமிப்பு போன்றவை எங்கெங்கு காணப்படுகின்றதோ அங்கெல்லாம் இவ்வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எமது மக்களுக்கு எதிராக இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளார்கள். எமது நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றன. வளங்கள் சூறையாடப்பட்டுவருகின்றன. எம்மை நாமே ஆளும் அதிகாரம்   எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.பறித்தவற்றில் அதைத் தருகின்றோம் இதைத் தருகின்றோம் என்று பேரம் பேசுகின்றார்கள் அரசாங்கத்தினர்.அரசாங்கத்தைக் கோபப்படுத்தாதீர் என்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மெத்தப்படித்த நபர்கள்.

இன்றைய எமது இந்தநிலைமையினைச்சரியாகப்புரிந்துகொண்டுகாணாமல் போனமக்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழகமாணவர்கள் 71 ஆவது இந்த சுதந்திரதினத்தை கரிநாளாகக்கருதி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.இந்த நடவடிக்கை எம்மை நெகிழவைக்கும் நடவடிக்கை.எம் மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் நடவடிக்கை. புத்துணர்வைத்தரும் போராட்டம். நம்பிக்கையைஅளிக்கும் போராட்டம்.தமிழ்த் தலைமைகள் போல் அல்லாது எமதுமக்கள் விழித்தெழுந்துள்ளார்கள் 

இதேவேளை ஐ.நா சாசனத்தின் 7 ஆவதுஅத்தியாயத்தின் கீழ் உள்ளஅதிகாரத்தின் கீழும் செயற்படுமாறு தமிழ் அரசியல் கட்சிகள் ஐ.நா செயலாளர் நாயகத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை கூட்டாக ச மர்ப்பிப்பது பொருத்தமானது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஊடாகநடவடிக்கைஎடுக்க இருக்கின்றேன். இது தொடர்பில் கஜேந்திரகுமார்,சுரேஷ் பிறேமச்சந்திரன்,ஐங்கரநேசன்ஆகியோர் மற்றும் அனந்திசசிதரன் ஆகிய பலரின் கட்சிகளுடன் தொடர்புகொள்ள இருக்கின்றேன். 

எமது போராட்டங்கள் எமது மக்களுக்கு விடிவுகாலத்தைத் தந்து,ஒற்றுமையைத் தந்து,உரியநிவாரணங்களையும் பெற்றுத்தரவேண்டியே இன்று நாம் இணைந்துள்ளோம் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

No comments