தலையும் வாலும் காட்டும் தமிழரசு விலாங்கு?


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் புதிய அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் தமது தலைவர்களிற்கு சிறிதும் விட்டுக்கொடுக்காத திறமை வாய்ந்தவர்களாவர்.அதனை அவர்கள் பலரும் நிரூபித்தே வருகின்றனர்.
அதனை இன்றைய தினம் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஆதரவாளரும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான நபரொருவர் நிரூபித்துள்ளார்.

முன்னதாக கிளிநொச்சியில் படை அதிகாரிகள் சகிதம் நடைபெற்ற இலங்கை சுதந்திர தின நிகழ்வில் அவர் பங்கெடுத்திருந்தார்.

பின்னர் கிளிநொச்சி நகரில் நடந்த சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்திலும் அவர் சிறீதரன் தரப்புடன் இணைந்து பங்கெடுத்திருந்தார்.
ஒரே நபர் அதுவும் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி சார்ந்த பிரமுகர் சுதந்திர தின ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டமை சமூக ஊடகங்களில் இன்றைய தினம் வைரலாகியுள்ளது.

No comments