வவுனியா வர்த்தக சங்கமும் பூரண ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக  நலன்புரி சங்கம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ம் திகதி வடக்கு கிழக்கின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமையம் கிளிநொச்சியில் மாபெரும் ஆர்பாட்டபேரணியை ஏற்பாடு செய்துள்ளதுடன் அன்றையநாள் முழுவதும் வடமாகாணம் தழுவிய ஆதரவினை கேட்டிருந்த நிலையிலே வவுனியா வர்த்தக நலன்புரி சங்கம் இப் போரட்டத்திற்கான ஆதரவினை தெரிவித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டமானது நியாயமானதும் வலுவானதாகவும் உள்ளது.

தமிழ் மக்களுக்கான தீர்வு இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் கோரிக்கைகக்கு அரசாங்கம் உரிய பதிலினையும் இதுவரை வழங்க முனு;வராமை பெரும் வேதனையளிக்கின்றது. இச் சூழலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 25 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம் தனது முழுமையான ஆதரவை வழங்கி நிற்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments