சுட்டு வீழ்த்தப்பட்டன இரு இந்தியப் போர் விமானங்கள்!!

இரு இந்தியப் போர் விமானங்களை பாகிஸ்தான் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் படையினர் அறிவித்துள்ளனர்.

சுடப்பட்ட ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் மற்றைய விமானம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கஸ்மீர் பகுதிக்குளும் வீழ்ந்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தள்ளது.

தங்கள் பகுதிக்குள் வீழ்ந்த விமானத்தின் விமானிகள் இருவர் உயிருடன் பிடிபட்டுள்ளனர் என்றும் அதில் ஒருவர் கடுமையான காயங்களுடன் சிகிற்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய நபரின் பெயர், விமானியின் குறியீட்டு இலக்கம் என்பவற்றைக் கூறும் விமானியின் காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.

No comments