சொந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரசா மே எழுதிய உருக்கமான கடிதம்

பிரெக்ஸிட்’ பேச்சுவார்த்தைக்காக பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சென்றுள்ள தெரசா மே, அங்கிருந்தபடி தனது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்து விட்டு பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தெரசா மே எழுதியுள்ள கடிதத்தில்:-

‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் எம்.பி.க்களின் நிலைப்பாட்டை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நமது நாட்டிற்கு எது சிறந்ததோ அதை செய்யவேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கமாக உள்ளது. அதை செய்ய நமக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை என்றாலும், அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற தவறினால் எந்த காரணத்துக்காக மக்கள் நம்மை அவர்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்களோ அது தோல்வியில் முடியும். மக்களின் பிரகாசமான எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே எம்.பி.க்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட்டை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments