செல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை!


ரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாகியுள்ளனர்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மகள் ரணிலின் அலுவலகத்தில் பணியாற்றிவருகின்ற நிலையில் தற்போது மத்தியவங்கி ஊழியராகி செல்வம் அடைக்கலநாதன் மகனும் கரை சேர்ந்துள்ளார்.

இன்னொரு புறம் மாவையும் தனது மகனிற்கு ஏற்கனவே மத்திய வங்கியில் வேலை வாய்ப்பினை ரணிலை பிடித்து பெற்றுவிட்ட நிலையில் தற்போது தானும் சளைத்தவன் இல்லையென தற்போது செல்வம் அடைக்கலநாதனும் சாதித்துள்ளார்.

ஏற்கனவே வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ரணிலை பிடித்து மகனிற்கு காணிகளை ஏக்கர் கணக்கில் வளைத்துவைத்துள்ளார்.

இதனிடையே சுமந்திரன் உள்ளிட்ட பலரும் மேற்குலக நாடுகளில் அரச புலமைப்பரிசில்களில் கல்வி கற்க பிள்ளைகளை அனுப்பி வைத்திருப்பது தெரிந்ததே.

No comments