ஹர்த்தாலிற்கு தமிழரசு எதிர்ப்பு ?

எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சி மௌனம் காத்து வருகிறது.

ஜெனிவாவில் வரும் திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

வரும் திங்கட்கிழமை இந்தப் போராட்டத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்புகள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் அமைப்புகள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

எனினும், தமிழரசுக் கட்சி இதுவரை ஆதரவு அளிக்கவில்லை.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளை சிவில் சமூக அமைப்புகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments