அரச அமைச்சரானார் சுமந்திரன்?


ஜக்கிய தேசியக்கட்சிக்கு முண்டு கொடுத்ததன் பலனாக மீண்டும் தனது விசேட அதிரடிப்படை பாதுகாப்பினை பெற்றுக்கொண்ட சுமந்திரன் தற்போது அமைச்சர்கள் மட்டத்திலான உலங்குவானூர்தி சேவையினை பெறும் வகையில் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ரணிலுடன் அவர் பயணித்த அதே உலங்கு வானூர்தியில் சுமந்திரனும் பயணிக்கும் சலுகை அவருக்கு கிடைத்துள்ளது.

யாழ்.நகரில் வந்திறங்கிய ரணிலுடன் கூடவே சுமந்திரனும் வருகை தர யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட்டிற்கோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்று ரணிலையும் சுமந்திரனையும் வரவேற்கும் சந்தர்ப்பங்கிடைத்ததாக சிலாகித்துக்கொண்டார்.

சாதாரண கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு நிகரான சலுகைகளை பெறுகிறார்கள் . இலங்கை வரலாற்றில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச வான் வழி பயண போக்குவரத்தை பெறுவது இயலாத காரியம் . ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொது கூட தயா கமகே நிறுவனத்திற்கு சொந்தமான தயா வான் வழி சேவைகளை தான் பயன்படுத்தி இருந்தார்.

இப்போது சாதாரண நாhளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு அந்த வான் வழி போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுகிறது.இதன் மூலம் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள பின்கதவு சலுகைகள் எத்தகையதென்பது தெரிகின்றதென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments