வன்னியில் காணி பிடிப்பில் சிறீதரன் படையணி?

 வன்னியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு ஈடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியினர் காணி பிடிப்பில் சிறீதரன் தலைமையில் மும்முரமாகவுள்ளனர்.

ஏற்கனவே புலம்பெயர் நாடுகளிற்கு தப்பித்து சென்றுள்ள முன்னாள் போராளிகளது காணிகளை ஆக்கிரமித்து தனது ஆதரவாளர்களிற்கு வழங்குவதாக சிறீதரன் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது படையினரால் விடுவிக்கப்படும் காந்தரூபன் அறிவுச்சோலைஇசெஞ்சோலை காணிகளை ஆக்கிரமிக்க முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் கிளிநொச்சியிலுள்ள காந்தரூபன் அறிவுச் சோலை காணியில் உள்ள கிணறுகளை மாற்று வலுவுள்ளோர் சங்கம் சுத்தப்படுத்தும் பணியினை முன்னெடுத்திருந்தது.அப்போது அவ்விடத்துக்கு வருகை தந்த தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டார்கள்.
குறித்த காணிகளது கிணறுகள் தொடர்பில் இதுவரை கண்டு கொள்ளாதிருந்த சிறீதரனின் தமிழரசுக்கட்சியினர் தற்போது மாற்று வலுவுள்ளோர் சங்கம் தனது பணியை திறம்பட செய்துவருகின்ற நிலையில் அதனை தடுத்துவருகின்றனர். 

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் இருந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை காணிகள் கடந்த நவம்பர் மாதம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த காணிகள் அப்போது செஞ்சோலையில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

காந்தரூபன் அறிவுச் சோலை காணியில் வாழும் பிள்ளைகளுக்கு உதவ கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கம் கிணறுகளை சுத்தப்படுத்தும் போது தடுத்து நிறுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments