காணாமல் போனோர் குறித்த பிராந்திய அலுவலகங்கள் விரைவிலாம்

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் காணாமல்போனவர்கள் குறித்து ஆராய்வதற்காகப் பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படும் என காணாமல்போனோர் செயலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக காணாமல்போனோர் செயலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல்போனோரின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் இலகுவான சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட சில பிரதேசங்களில் பிராந்திய அலுவலகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் காணாமல்போனோர் செயலகம் வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளையும் அரசு விரைந்து நிறைவேற்றவேண்டும்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் காணமால் போனவர்களின் உறவினர்கள் எமது அலுவலகத்தினூடாக இலகுவான சேவைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து சில திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன” – என்றார்.

No comments