கிளிநொச்சியில் ஆர்ப்பரிந்தெழுந்த மக்கள்!


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு ஆதரவாக திரண்ட மக்கள் சக்தியால் கிளிநொச்சி இன்று திணறிப்போனது.மக்கள் ஏ-9 வீதியை முடக்கி முன்னெடுத்த போராட்டத்தால்  வடக்கு மற்றும் தெற்கு வீதி போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இரண்டு வருடத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகிறது. இதேவேளை இன்றைய தினம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்;கப்பட்டிருந்தது.


ஒருபுறம் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி ரணிலிற்கு அஞ்சி திருட்டு மௌனம் கடைப்பிடிக்க அதனை தாண்டி ஏனைய கட்சிகளதும் பொது அமைப்புக்கள்,வர்த்தக சமூகம்,சிவில் சமூகம் மற்றும் கட்சிகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.


No comments