நல்லூரில் அரசியல் கலந்துரையாடல்

யாழ். முகாமையாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்த அரசியல் கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை(23.02.2019) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

முன்னாள் இணைந்த வட- கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் லங்க சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் அரசாங்க அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கலந்து கொண்டு "இலங்கை அரசியலும் எதிர்காலமும்" எனும் தலைப்பில்  நீண்ட உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்களால் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதிலளித்தார்.

இதன்போது இலங்கை அரசியலின் தற்போதைய போக்கு, புதிய அரசியல் யாப்பு, அரசியல் தீர்வு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. 

இந்த நிகழ்வில்  மக்கள் முன்னேற்றக் கூட்டணியின்  செயலாளர்  கணேஸ்வரன் வேலாயுதம், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா, கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments