யாழில்.நாகவிகாரையின் டெங்கு?


யாழ்.நகரின் ஆரியகுளம் சந்தியில் உள்ள புத்த விகாரைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் இருந்து மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஆகியவை வெள்ளவாய்களுக்குள் விடப்படுகின்றiயால் நகரின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.குறிப்பாக டெங்கு தாக்கத்தை தோற்றுவிக்கும் வகையில் அது அமைந்துள்ள போதும் எவரும் கண்டுகொள்வதில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அறிந்த தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ( சுகாதார குழு தலைவர்) மற்றும் மகேந்திரன் மயுரன் ,சிவகந்தன் தனுஐன் மற்றும் யாழ் மாநகர சபையின் ஊழியர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் அந்த இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதனிடையே பொது மக்களின் இயல்பு வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கை தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் நடவடிக்கை எடுக்க அஞ்சுவதாக சொல்லப்படுகின்றது.

நாகவிகாரையின் பிக்கு மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என்றும் இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது. இது பல காலமாக நடைபெறுகிறது என்றும் மக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

யாழ்.நகரின் ஆரியகுள சந்தியிலுள்ள நாகவிகாரைக்கென நாள் தோறு ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments