கேப்பாபிலவில் புதைகுழி: மூடி மறைக்க ஆளுநரும் சதியா?

கேப்பாபிலவு காணிகளில் மனித புதைகுழிகள் இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். அதனாலையே இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள பகுதியை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என கூறுகிறார்கள். அதனடிப்படையிலேயே வடமாகாண ஆளுநரும் கேப்பாபிலவு பிரச்சனை ஒரு சிலரின் பிரச்சனை என்கிறாரென து.ரவிகரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான து.ரவிகரன் விசேட பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தியிருந்தார்.

அண்மையில் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கேப்பாபிலவில் படையினரது காணி ஆக்கிரமிப்பு பிரச்சினை ஒரு சிலரது பிரச்சினையென தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அவர் அங்கு மனித புதைகுழிகளை மூடி மறைக்க படையினர் நிலத்தை விடுவிக்காது பின்னடித்துவருகின்றனர்.அதனை வடக்கு ஆளுநர் மூடி மறைக்க கேப்பாபிலவு பிரச்சனை ஒரு சிலரின் பிரச்சனை என வியாக்கியானம் செய்வதாக து.ரவிகரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

No comments