காவல்துறையையும் சந்தித்தார் ஆளுநர்!
நாளுக்கொரு சந்திப்பில் ஈடுபடுவதுடன் அதனை பகிர்ந்து கொள்வதும் வடமாகாண ஆளுநரது கடமைகளுள் ஒன்றாகியிருக்கின்றது.
அவ்வகையில் இராணுவம் ,கடற்படையினை தொடர்ந்து தற்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோவை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (26) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் நிலவும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குறைபாடு தொடர்பிலும் , வட மாகாணத்தில் பொலிஸ் சேவையினை தமிழ் மொழி மூலம் முன்னெடுத்து செல்வதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடமாகாணத்தில் பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ் போதனா வைத்தியசாலைக்கும் ஆளுநர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை நேற்று (25) இரவு மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment