கொலையாளிகளை பாதுகாப்பதில் நல்லாட்சியும் மும்முரம்!


காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான படை அதிகாரிகளை நீதிமன்ற குற்றவாளி கூண்டிலேற்ற தொடர்ந்தும் அரசு பின்னடித்தே வருகின்றது.

இந்நிலையில் நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இருக்கிறார்களா, அவர்கள் எங்கு இருக்கிறார்களா, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது, என்பதை சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் வெளிப்படுத்தவேண்டும் என்று யாழ்.மேல்நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அதனை வழங்கத் தயார் என இலங்கை அரசு வியாக்கியானம் அளித்துவருகின்றது.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற  24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர முன்னிலையானார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள் என மன்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பியது.

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இருக்கிறார்களா, அவர்கள் எங்கு இருக்கிறார்களா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் வெளிப்படுத்தவேண்டும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் சமர்ப்பணம் செய்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அதனை வழங்கத் தயார் என சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையிலான பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர மன்றுரைத்தார்.
அவரது பதிலை நிராகரித்த மனுதாரர்களின் சட்டத்தரணி கு.குருபரன், எமது கோரிக்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்த்து?  என்பதனை வெளிப்படுத்தவேண்டும் என்பதேயாகும் என மன்றுரைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த மன்று வழக்கை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற  24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அவர்களில் 12 பேர் சார்பில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி  யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல்கள் தனித்தனியே செய்யப்பட்டன. அதில் 9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.  அந்த மனுக்கள் யாழ்ப்பாணத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டன.

வேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 9 பேரின் ஆட்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

காணாமல் ஆக்கப்பட்ட மூவரின் மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்து ஒரு வருடத்துக்கு மேலாக இடம்பெற்று வருகின்றன.

இந்த வழக்கில் முதலாம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலானவும் இரண்டாம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதியும் மூன்றாம் பிரதிவாதியாக  சட்டமா அதிபரும்  குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முதலாம் எதிர் மனுதாரரான  இராணுவக் கட்டளை அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் சட்ட மா அதிபர் வழக்கை முன்கொண்டு செல்ல யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி மா.இளஞ்செழியன் அனுமதி வழங்கியிருந்தார்.

No comments