மன்னார் புதைகுழி ரகசியம் - புதன் அம்பலமாகும்


மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட றேடியோ கார்பன் பரிசோதனை  அறிக்கை வரும் புதன்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மன்னார் புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள 300இற்கும் அதிகமான எலும்புக்கூடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு எலும்புக்கூடுகளின் மாதிரி எலும்புகள் புளோரிடா ஆய்வகத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அவற்றில் ஐந்து மாதிரிகள் தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் கிடைத்ததாகவும் அந்த அறிக்கை புதன்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

“ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் வரை இந்த கார்பன் ஆய்வு அறிக்கை இரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், அதன் பின்னர், நீதிமன்றம் அடுத்த கட்டம் குறித்து உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments