மாவைக்கே வாக்கு: சரவணபவன் சரவெடி?


தமிழரசுக்கட்சியின் இளைஞரணியில் செயலாளராகியிருக்கின்ற மாவை சேனாதிராசாவின் மகன் தமிழ் அமுதன் மற்றும் முன்னாள் சுன்னாகம் பிரதேச சபை தலைவர் பிரகாஸ் உள்ளிட்ட சிலருக்கே தனது பத்திரிகை முக்கியத்துவம் வழங்கி பரப்புரை செய்யுமென தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் இளைஞரணி தற்போது சுமந்திரனின் கைக்குள் சென்றுள்ளது.இதனால் தற்போது சுமந்திரனுடன் அடுத்த தலைவர் போட்டியிலிருக்கின்ற சரவணபவன் கீரியும் பாம்பும் உறவை கொண்டுள்ளார்.அத்துடன் தனது பத்திரிகையின் ஆசிரிய பீடத்திற்கு சுமந்திரனை போட்டுத்தாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கூட்டமைப்பிற்கு அடுத்து மாவையே தலைமை தாங்கவேண்டுமென களமிறங்கியுள்ள சரவணபவன் மாவையின் மகனையும் பிரச்சாரப்படுத்தி சுமந்திரனின் ஆதரவாளர்களை முடக்குவேனென சவால் விடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே மறுபுறம் சரவணபவன் ஆதரவு இரு உள்ளுராட்சி உறுப்பினர்களை பதவிகளை ராஜினாமா செய்ய சுமந்திரன் நிர்ப்பந்தித்துவருவதாக சொல்லப்படுகின்றது.

உதயன் முன்னாள் பணியாளரான ஒருவர் உள்ளிட்டவர்களையே பதவி விலக சுமந்திரனின் ஆலோசனையில் பணிக்கப்பட்டுள்ளது.  

No comments