மன்னார் புதைகுழி - நேற்றும் மூன்று சிறுவர்களது எலும்புக்கூடுகள் மீட்பு


மன்னார் – புதைகுழியில் தொடர்ந்து அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இதுவரையில் கண்டுபிடிக்கபட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்ட போது கருத்து வெளியிட்ட புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்டமருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச,

”இதுவரையில், புதைகுழியில் இருந்து 312 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவையாகும்.

கடந்தவாரம் வரை, 23 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இன்று இந்த எண்ணிக்கை இன்று 26 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள், புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்னும் ஒருவாரத்தில் இந்தப் பரிசோதனை அறிக்கை கிடைக்கும். ஆய்வகத்தின் அறிக்கையை எனக்கும், மன்னார் நீதிமன்றத்துக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments